
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதோடு குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அரசியல் சார்பின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார்.