திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புது ராமகிருஷ்ண புரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் பவானி நகர் காட்டுப்பகுதியில் வைத்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி குடுமிபிடி சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களை அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவி சக மாணவனை காதலித்து வந்துள்ளார். இந்த மாணவனுக்கு அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவியும் வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்துள்ளார். இந்த தகவலை மாணவனை காதலிக்கும் மாணவி தெரிந்து கொண்ட நிலையில் எப்படி நான் காதலிக்கும் பையனுக்கு நீ சாட்டிங் செய்யலாம் என மாணவியுடன் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் இரு மாணவிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் வந்த நிலையில் பிரச்சனையை சமூகமாக பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இரு அவரவர் தோழிகளை கூட்டிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தை சமரசமாகாததால் திடீரென இருதரப்பு மாணவிகளும் தகாத வார்த்தைகளால் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டதோடு குடுமிபிடி சண்டையிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பள்ளியில் படிக்கும்போதே காதலுக்காக மாணவிகளின்  சண்டை போட்டுக் கொண்ட சம்பவம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.