ஒரு சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம் தற்போது இணையத்தில் இதயங்களை உருக்கும் வீடியோவாக பரவி வருகிறது. வீடியோவில், குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடும் அந்தச் சிறுமி, கேக்கை வெட்ட முன் கைகளை மடித்து, கேக் மேலே உள்ள மெழுகுவர்த்தியை தொட்டு ஆசீர்வாதம் பெறுகிறார். அந்த தருணத்தில் அருகில் அமர்ந்திருக்கும் அவருடைய பாட்டியும் அதேபோன்று செய்கிறார். இந்த மனமிகுந்த நிமிடங்கள், பாரம்பரியத்தின் அழகையும், குடும்பத்தின் உணர்வுமிக்க சூழலையும் மிக நையாண்டித்தனமாகப் பதிவு செய்கின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Ayra Singh (@theayraadiariess)

சமூக வலைதளங்களில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. “கலாச்சாரம் ஆழமாக வேரூன்றியிருக்கும்போது, பிறந்தநாள் மெழுகுவர்த்தி கூட ஒரு பிரார்த்தனையாக மாறுகிறது” என ஒருவர் கருத்து பகிர, மற்றொருவர் “இந்த வீடியோவின் பின்னணியில் உள்ள குடும்பத்தின் மதிப்புகளும், வழிகாட்டும் பாட்டியும் தாத்தாவும் மிக முக்கியமான பாத்திரம் வகிக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.

இத்தகைய வீடியோக்கள், பாரம்பரியம் மற்றும் நம் குடும்ப மதிப்புகள் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவுபடுத்துகின்றன. ஒரு சிறுமி, தன் அனுபவத்தின் மூலம் உலகத்துக்கே ஒரு பாடம் கற்பிக்கிறார் “பிறந்தநாளில் கேக் வெட்டுவதற்கு முன்னர், சுடரின் முன் நன்றி கூறுவது.” இதுவே ஒரு கலாச்சாரத்தின் மையம். “தாத்தா-பாட்டியின் வளர்ப்பு என்பது குழந்தையின் மனதை மட்டுமல்ல, அதன் வாழ்கையைச் சீராக்குகிறது” என ஒரு பயனர் அழகாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ, இனிய நினைவுகளின் அடையாளமாக ஒவ்வொருவரின் இதயத்திலும் நிலைத்து நிற்கிறது.