நடிகை குஷ்பு முதல் தீபிகாபடுகோன் வரை 9 பிரபலங்கள் தங்களது பாலியல் துஷ்பிரயோக அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக கூறியிருக்கின்றனர். அரசியல்வாதியாக மாறிய மூத்த நடிகையான குஷ்பு கூறியதாவது, எனக்கு பாலியல் தொல்லை துவங்கியபோது 8 வயது தான். இதையடுத்து 15 வயதில் அவருக்கு எதிராக பேசும் துணிச்சல் எனக்கு இருந்தது” என்று கூறியிருக்கிறார்.
மேலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நடிகை சோனம் கபூர், முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென், நடிகை ஸ்வேரா பாஸ்கர், கல்கி, பிபாஷா பாசு, மூத்த நடிகர் பியுஸ் மிஸ்ரா, அக்ஷய் குமார் ஆகியோர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.