பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ஜி. இதையடுத்து இவர் இயக்கிய திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் வரவேற்பை பெற்று சில சர்ச்சைகளையும் கிளப்பியது. இந்த படங்களை அடுத்து இவர் இயக்கியுள்ள “பகாசூரன்” படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும், நட்டி நட்ராஜ், ராதாரவி போன்றோர் முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்கள்.

இப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசை அமைக்கிறார். பகாசூரன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி கவனம் ஈர்த்தது. இத்திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது. இந்த நிலையில் பகாசூரன் படத்தில் இடம்பெற்றுள்ள “ஆனந்தம் கூத்தாடும்” பாடலை படக்குழு வெளியிட்டு உள்ளது. தந்தை-மகள் இருவருக்கும் இடையிலான பாசத்தை வெளிப்படுத்தும் இப்பாடல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.