சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்யும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ரஜினி வருகிறார். இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உட்பட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் மலையாள நடிகர் மோகன்லால் , நடிகை தமன்னா , தெலுங்கு நடிகர் சுனில் , ஜாக்கி ஷெராப் போன்றோர் இணைந்து இருப்பதாகவும் சூட்டிங் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் சூட்டிங்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.