டைரக்டர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா, பாக்யராஜ், விடிவி கணேஷ் ஆகிய நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் “டாடா”. சென்ற வாரம் டாடா படம் ரிலீஸ் ஆகியது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்று உள்ளது. முதல் நாளில் டாடா படத்திற்கு கம்மியான வசூல் என்றாலும் அடுத்தடுத்த நாள் மிகப்பெரிய வசூலை பெற்றது.

இப்போது உலகம் முழுவதும் இந்த படம் 3 தினங்களில் ரூபாய்.6 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. நிச்சயம் கவினுக்கு இது மிகப் பெரும் வெற்றி மற்றும் அவரின் திரைப் பயணத்தின் நல்ல ஆரம்பம் என்று கூறப்படுகிறது.