ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் வருடம் வெளியாகி உலகையே திரும்பி பார்க்க வைத்த படம் தான் அவதார். இந்த படம் உலக அளவில் 2.7 பில்லியன் வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. இதுவே உலக அளவில் அதிக வசூல் படம் என முதலிடத்தில் இருக்கிறது.

முதல் பாகத்தை அடுத்து 13 வருடங்களுக்கு பிறகு சென்ற டிசம்பர் மாதம் இந்த படத்தின் 2ஆம் பாகமான “அவதார் தி வே ஆஃப் வாட்டர்” திரைப்படம் வெளியாகி சுமார் ரூ.2.1 பில்லியன் இதுவரை வசூல் செய்துள்ளது. இதன் வாயிலாக அவதார் முதல்பாகத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்றாலும் கூட, டைட்டானிக் திரைப்படத்தின் வசூலை முறியடித்து உள்ளது அவதார்-2. அதோடு உலகளவில் அதிகம் வசூல் செய்த டாப் பட்டியலிலும் அவதார்-2 இடம்பிடித்துள்ளது.