பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்திய படையினர் தாக்கினர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் அபாயம் ஏற்பட்டது. அப்போது இந்தியாவுக்கு சொந்தமான அல்லது குத்தகைக்கு விடப்பட்ட விமானங்கள், ராணுவ விமானங்கள், பொது போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த தடை ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காலை 5.19 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. வருகிற 24-ஆம் தேதி வரை அனைத்து பாகிஸ்தான் விமானங்களும் இந்தியாவின் வான்வெளியை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி இந்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அவர்களின் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.