ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களுக்கு வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது.

மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பமாகசத்தின் சார்பாக இந்த புதிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. ஆன்லைன் கேமிங் நிறுவனங்களுக்கான முகவரிகள், விளையாட்டு   பதிவு செய்வது மிகவும் அவசியம். பதிவு செய்யப்பட்ட  நிறுவனங்கள் மற்றும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும்  நிறுவனகளை ஆன்லைன் கேம்களை பதிவு செய்யலாம். ஆன்லைன் கேம் தொடர்பாக வரும் புகார்கள் குறித்து உடனே தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் கேம் நிறுவனங்கள் இந்தியாவின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றி தான் நடைபெற வேண்டும்.

கட்டாயம் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  ஆன்லைன் கேம் நிறுவனங்கள், இந்திய முகவரிகள்,  விளையாடுவோரின் முகவரிகள் சரிபார்ப்பு அவசியம். ஒரு நபர் ஆன்லைன்ல விளையாடுபவட்சத்தில் நுழைவதற்கு தகுதியான வயது தொடர்பான சட்டங்கள் உட்பட அனைத்துக்கும் கட்டுப்பாடு வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடந்து முடிந்த குளிர்கால கூட்ட தொடரில் எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பணத்தை இழந்த பலரும் தற்கொலை செய்து உயிரிழப்பு ஏற்படுவதாக தொடர்ந்து அமலில் ஈடுபட்டிருந்தார்கள். இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அமலில் ஈடுபட்ட நிலையில் தற்போது புதிய வரைவு விதிமுறைகள் மத்திய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றது.