ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளித்த அரசாணையை மத்திய அரசு  வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. இந்நிலையில் விளையாட்டை வழங்கக் கூடிய இணையதளம்  மத்திய அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தற்போது வரைவு விதிமுறைகளை வெளியிட்டு இருக்கிறது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.