EPFO போர்ட்டலிலிருந்து PF இருப்பை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பதை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். அதன்படிEPFOன் அதிகாரப்பூர்வமான வலைதளத்திற்கு சென்று “Our Services” என்ற டேபுக்குள் போகவேண்டும். தற்போது டிராப்-டவுனில் தோன்றும் பட்டியலிலிருந்து For Employees என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையடுத்து வரும் பக்கத்தில் “Member Passbook” எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதன்பின் உங்களது யுஏஎன் எண், பாஸ்வேர்டு உள்ளீடு செய்த பிறகு காட்டப்படும் கேப்ச்சா கேள்விக்கு பதிலளித்து “Login” பட்டனை அழுத்த வேண்டும். ஒரு முறை நீங்கள் EPF முகப்பு பக்கத்தில் உள் நுழைந்தவுடன் அவற்றில் உங்களுடைய பெயர், UAN எண் மற்றும் PAN எண் போன்றவை காண்பிக்கப்படும்.

உங்களது PF இருப்பை சரிபார்க்க விருப்பப்படும் உறுப்பினர் ஐடி எண்ணை தேர்ந்தெடுக்கவும். பின் கீழே வரும் பல ஆப்ஷன்கள் வாயிலாக உங்களது பிஎப் இருப்பைச் சரிபார்க்க முடியும். தற்போது நீங்கள் உங்களுடைய பிஎப் கணக்கில் உள்ள இருப்பை பார்க்க முடியும். திரையில் தெரியும் அந்த கோப்பினை பிடிஎஃப் வடிவத்திலும் நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.