விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் இதுவரை ஆறு சீசங்கள் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக் பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்க உள்ளது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எவ்வாறு நடைபெறும் ஏதாவது ரூல்ஸ் மாற்றப்பட்டுள்ளதா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் இந்த சீசனில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் ஏதாவது சீசனுக்கான புதிய பிரமோ வில் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா, ஆயிஷா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.