தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அக்டோபர் 19ஆம் தேதி புளியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா மற்றும் சிறப்பு காட்சி ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனையில் லியோ பட குழு தவித்து வருகின்றது.

இதனைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் லியோ திரைப்படத்தின் டிரைலரை வெளியிடுவதற்கு படகுழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல் சிங்கின் பாடலான நான் ரெடி வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இரண்டாவது பாடல் வெளியாக உள்ளது.