பிக் பாஸ் நிகழ்ச்சி 6 சீசன் கடந்து தற்போது ஏழாவது சீசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்த நட்சத்திரங்கள் ஏராளம். அதுவே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பிறகு காணாமல் போனவர்களும் உள்ளனர். அப்படி மக்கள் மனதில் இடம் பிடித்த முந்தைய டைட்டில் வின்னர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று இதில் பார்க்கலாம்.

முதலாவது சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு மார்க்கெட் ராஜா மற்றும் ராஜ பீமா என்ற திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது அஜித் நடிக்கும் விடாமுயற்சியின் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பிக் பாஸ் வரலாற்றில் டைட்டில் ஜெயித்த ஒரே பெண் போட்டியாளரான ரித்விகா ஒரு சில திரைப்படங்களில் நடித்த நிலையில் தற்போது பெரிய அளவில் இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

மூன்றாவது சீசனில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற முகின் ராவ் அதன்பிறகு வேலன் என்ற திரைப்படத்தின் நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாத நிலையில் தற்போது வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார்.

நான்காவது சீசனில் வெற்றி பெற்ற ஆறு அர்ஜுனன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றார்.

ஐந்தாவது சீசன் வெற்றியாளரான ராஜு சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு விஜய் டிவியில் ராஜ் வீட்டில பார்த்து என்ற நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற நிலையில் தற்போது வரை இவருக்கு எந்த ஒரு படத்திலும் ஹீரோவாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆறாவது சீசனில் வெற்றியாளரான வசீம் அதிக நெகட்டிவ்வான போட்டியாளராக இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற பணத்தை ஏழை பிள்ளைகளுக்கு கொடுத்து உதவினார். தற்போது இவருக்கு எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.