டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள ஹுமான்யூன் கல்லறையின் ஒரு குவிமாடம் வெள்ளிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. மாலை 4.30 மணியளவில் இது நடந்ததாக தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இடிபாடுகளில் எட்டு முதல் ஒன்பது பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் கூறினர்.
கி.பி 16-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்ட இந்த கல்லறை, டெல்லியின் முக்கியமான வரலாற்றுச் சின்னமாகும். தினமும் பல சுற்றுலாப் பயணிகள் வந்து பார்வையிடும் இடம் என்பதால், இந்த விபத்து பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
A dome of Humanyun’s Tomb in Delhi’s Nizamuddin area collapses, eight to nine feared trapped pic.twitter.com/wGsn1Lz64d
— Raajeev Chopra (@Raajeev_Chopra) August 15, 2025
“>
