சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு இளைஞன் கையில் மலைப்பாம்பை பிடித்து கேமரா முன் போஸ் கொடுக்கிறார். ஆரம்பத்தில் அவர் பயமின்றி பாம்புடன் விளையாடுவது போல் தெரிகிறது. ஆனால் சில வினாடிகளில் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த இளைஞன் கையை பாம்பின் தலைக்கு அருகே கொண்டுசெல்லும் போது, மலைப்பாம்பு திடீரென அவனது முகத்தை நேரடியாக கடித்துவிட்டது.

இந்த காட்சி மிகவும் வேகமாக நடந்ததால், அதை பார்த்தவர்களே நடுங்கி விட்டனர். மலைப்பாம்பு விஷம் இல்லாத பாம்பு என்றாலும், அது ஒரு வேட்டையாடும் தன்மை கொண்டது. ஒருவரை பிடித்தால், மூச்சுத்திணறடித்து விடும். அதுபோன்ற பாம்புகளுடன் விளையாடும் இந்த இளைஞரின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். snakesaverafsar என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Snake Saver Afsar Hussain (@snakesaverafsar)

“>

பலரும் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ஒருவரின் கருத்துப்படி, “இது அவனுக்கு கிடைத்த தகுதியான பாடம்.” இன்னொருவர், “எப்போதும் இல்லாத மிக மோசமான முத்தம்” என்று கிண்டலாக எழுதினார். மேலும் சிலர், “விலங்குகளுடன் விளையாடுவது ஆபத்தானது. இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.