தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சர் ராஜமோகன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இனி ஒரு அரசு பள்ளிகள் கூட மூடப்படாது என்று அறிவித்த அவர் 10 மாணவர்கள் படித்தாலும் அந்த பள்ளி முழுமையாக செயல்படும் என்றார். இதனைத் தொடர்ந்து மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு தேனியில் 2.50 கோடி மதிப்பீட்டில் மணி மண்டபம் கட்டப்படும் என்று அதிரடியான மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டார்.

சமீபத்தில் இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவின் காரணமாக மரணமடைந்த நிலையில் அவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தது. அரசு சார்பில் முழு மரியாதையுடன் பாரதிராஜாவுக்கு இறுதி மரியாதை நடத்தப்பட்ட நிலையில் தற்போது பல தரப்பு கோரிக்கைகளையும் ஏற்று தமிழக வெற்றிக்கழகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பு திரையுலகினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.