உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டம் சேர்ந்தவர் சுபம் வர்மா. இவரது மனைவி அஞ்சு. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நிதின் என்பவருடன் அஞ்சுவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. கணவன் இல்லாத நேரத்தில் அஞ்சுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து உல்லாசமாக இருக்கும் நிதினின் செயல் சுபத்திற்குத் தெரியவர, அவர் தனது மனைையைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

எனினும், கணவனின் எதிர்ப்பை மீறி அஞ்சு தனது காதலனைத் தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் தகராறு வெடிக்க, உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு வழியின்றி சுபம் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, கணவன், மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய மூவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கணவன் சுபம் கூறுகையில், “என் மனைவி என்னுடன் அல்லது அவரது காதலனுடன் இருக்க வேண்டும். இருவருடன் சேர்ந்து என்னால் வாழ முடியாது. வேண்டுமென்றால் நான் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்” என்று வெளிப்படையாகத் தெரிவித்தார். ஆனால், அஞ்சுவோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, “எனக்கு என் கணவரும் வேண்டும், காதலனும் வேண்டும். இருவருடன் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்” என்று அடம் பிடித்துள்ளார்.

இளம் பெண்ணின் இந்தக் விநோதக் கோரிக்கையைக் கேட்டு காவல் நிலையத்திலிருந்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் போலீசார் மூன்று பேரிடமும் தனித்தனியாகப் பேசி ஒரு பரஸ்பர உடன்பாட்டிற்கு வர முயன்றனர். பல மணி நேர நீண்ட விவாதத்திற்குப் பிறகும் எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. இறுதிவரை அஞ்சு இருவருமே வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், வேறு வழியின்றி போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.