சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்த்தின் விலை சவரனுக்கு 840 வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74280 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. அதன் பிறகு ஒரு கிராம் 9285 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.

கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை 1480 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து இன்றும் விலை அதிகரித்துள்ளது. நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. தேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 10129 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81032 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு இரண்டு ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 128000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.