சென்னை கிரீன் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று லேசான தலைசுற்றல் காரணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூன்று நாள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கியிருந்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இன்று காலை, கிரீன் சாலை அப்போலோவில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சில முக்கிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் மீண்டும் கிரீன் சாலை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலமைச்சரின் தற்போதைய உடல்நிலை குறித்து இன்று காலை 10 மணி அளவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், அவரது உடல்நிலை, மேற்கொள்ளப்பட்ட சிகிச்சைகள் மற்றும் தொடர்ந்து எத்தனை நாள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பதுபோன்ற விவரங்கள் வெளிவர வாய்ப்புள்ளது. தமிழக மக்களும், அரசியல்வாதிகளும் முதலமைச்சரின் விரைவான உடல் நலம் மீட்புக்காக விருப்பம் தெரிவித்
