திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடேசன் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வெங்கடேசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் வெங்கடேசனுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.