ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் பேருந்து நிறுத்தம் பகுதியில் அத்தாணி செல்லும் பிரதான சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. இந்நிலையில் குடிபோதையில் 45 வயது மதியத்தக்க தொழிலாளி தள்ளாடியபடி நடுரோட்டில் துண்டை தலையணையாக வைத்து படுத்துவிட்டார். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஒரு சிலர் அவரை எழுப்ப முயற்சி செய்தனர்.
ஆனால் போதை தலைக்கேறி எழுந்திருக்க முடியாமல் இருந்த அந்த நபர் நடு ரோட்டிலேயே படுத்துக் கிடந்தார். இதனையடுத்து சிலர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து அவரை மீட்கும்படி செல்போனில் பேசிக் கொண்டிருந்தனர். இதனை கேட்டதும் தொழிலாளி ஒரு சில நிமிடத்தில் தானாக எழுந்து போதையில் தள்ளாடியபடி அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.