மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள கடிவாட் கிராமத்திலுள்ள ZP அரசு பள்ளி சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த பள்ளியின் மாணவர்கள் ஜப்பானீஸ் மொழியில் பேசுவதோடு, ரோபோட்டிக்ஸ் போன்ற உயர்நுட்ப கருவிகளையும் தாங்களே உருவாக்கி இயக்குவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Siddhesh Lokare🙋🏻‍♂️ (@sidiously_)

இச்சிறப்பான தருணங்களை பிரபல இன்ஸ்டாகிராம் வ்லாக்கர் @Siddhesh Lokare தனது பயண நாட்களில் பதிவு செய்துள்ளார். “30 பள்ளிகளைப் பற்றி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும்” எனும் நோக்கத்தில் பயணத்தில் இருக்கும் சித்தேஷ், தனது 12வது நாள் பயணமாக கடிவாட் கிராம பள்ளிக்கு சென்றார்.

அங்கு சென்றதும் மாணவர்கள் ஜப்பானிய வரவேற்பு அளித்ததோடு, அவர்களது மொழி மற்றும் ரோபோட் அறிவியலும் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாணவர்கள் தெரிவித்ததாவது, “நாங்கள் பள்ளியிலேயே ஜப்பானீஸ் மொழியை கற்றுக்கொண்டோம். எதிர்காலத்தில் ஜப்பானுக்கே சென்று வேலை செய்ய வேண்டும்” என்றனர்.

இந்த வீடியோ வெளியாகிய பிறகு, சமூக வலைதளங்களில் பாராட்டு மழை பெய்துவருகிறது. “இது நம்ம அரசுப் பள்ளியா? நம்பவே முடியலை!” என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், ஆசிரியர்களின் திறமையும், மாணவர்களின் ஆர்வமும், ஒரு சாதாரண கிராமத்துப் பள்ளியை சிறப்பான கல்வி மையமாக மாற்றி வைத்துள்ளது.