உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள் புகுந்த விஷப்பாம்பை எதிர்த்துப் போராடிய இரண்டு செல்ல நாய்களில் ஒன்று, தன் உயிரையே விட்டதாக ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
➡ कुत्ते और कोबरा में जबरदस्त भिड़ंत!
➡ घर में घुसे सांप को पालतू कुत्ते ने किया बाहर!
➡ खेत तक लड़ने के दौरान सांप ने कुत्ते को डंसा!
➡ लड़ाई में कुत्ते और सांप दोनों की हुई मौत!
➡ विन्ध्याचल क्षेत्र के बबुरा गांव का मामला!#Mirzapur #SnakeFight #PetDog… pic.twitter.com/tGdyD7WNVa
— NCR पत्रिका (@ncrpatrika) October 7, 2025
ராணா சிங் என்பவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட ‘பாதல்’ மற்றும் ‘கிரேஸ்’ என்ற நாய்கள், வீட்டிற்குள் வந்த கோப்ரா பாம்பை எதிர்த்துப் போராடின. கோப்ரா இறந்ததோடு, மூன்று முறை கடிக்கப்பட்ட பாதல் நாய், பின் உயிரிழந்தது.
ஜெர்மன் ஷெபர்டு இனத்தைச் சேர்ந்த பாதல், அந்த விஷப்பாம்பை வீடு முழுவதும் விரட்டி, வெளியே புல்வெளியில் நெறித்து, கடைசியில் கொன்றுவிட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் மூன்று முறை கடிக்கப்பட்டிருந்ததால், பாதல் சில மணி நேரத்தில் உயிரிழந்தது.
அதன் பின் அந்த வளர்ப்பு நாய்க்கு அந்த குடும்பத்தினர் இறுதிச்சடங்கு நடத்தினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, நெட்டிசன்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
