உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு சில்லறை விற்பனை அங்காடிக் கிளையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த புதிய குப்பைத் தொட்டிக்குள் பான் மசாலா எச்சில் துப்பப்பட்டிருந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டியின் மூடியைத் திறந்து பார்த்தபோது அதன் உட்புறம் முழுவதும் சிவப்பு நிறத்தில் கரை படிந்திருப்பதைக் கண்டு வாடிக்கையாளர்கள் முகம் சுளித்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Devoted Indian (@devotedindian)

பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய நாகரிகம் மற்றும் பொதுச் சொத்துக்களைக் கையாளும் விதம் குறித்துப் பலரும் தங்களது ஆதங்கத்தை இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனர். கல்வி அறிவும் சமூகப் பொறுப்பும் அவசியமான ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், இதுபோன்ற செயல்கள் அந்நகரத்திற்கே அவமானத்தை ஏற்படுத்துவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து இச்செயலில் ஈடுபட்ட நபரைக் கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மீண்டும் அவர் கடைக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளப் பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.