சமூக வலைத்தளங்களில் ஒரு டேங்கர் லாரி ஓட்டுநரின் வீடியோ வெளியாகி, இணையப் பயனர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

சாலையில் சரக்கு ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்த பிறகு, அந்த ஓட்டுநர் தனது உரிமையாளருக்கு (Owner) போன் செய்து மிகவும் சாதாரணமாகப் பேசுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வைரலாகும் அந்த வீடியோவில், சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கும் டேங்கர் அருகில் நின்று, ஓட்டுநர் தனது உரிமையாளரைத் தொடர்புகொண்டு, “மாலிக், ஒரு சின்னத் தவறு நடந்துவிட்டது” என்று நிதானமாகக் கூறுகிறார்.

உரிமையாளர் பதற்றத்துடன் “என்ன நடந்தது?” என்று கேட்க, அதற்கு ஓட்டுநர், “தூங்கிட்டேன். வண்டியைச் சாலையில் கவிழ்த்துவிட்டேன்” என்று அமைதியாகத் தெரிவிக்கிறார்.

இந்தத் தகவலைக் கேட்டும் உரிமையாளர் கத்தாமல், நிதானமாகப் பேசுவதைக் கண்டு நெட்டிசன்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். “இப்படி ஒரு உரிமையாளரைக் காண்பது அரிது” என்றும், “ஓட்டுநரும் உரிமையாளரும் மிகவும் கூலாக இருக்கிறார்கள்” என்றும் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.