ஒரு வீட்டில் கட்டுமானப் பணிக்காக (Construction Work) செங்கற்களை (Bricks) ஏற்றிச் செல்லும் தொழிலாளி ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரே முறையில் பல டஜன் செங்கற்களைத் தூக்கிச் செல்லும் அவரது அபாரமான உடல் பலத்தைக் கண்டு இணையப் பயனர்கள் மலைத்துப் போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by @aapkaculture

அந்த வைரல் வீடியோவில், தொழிலாளி ஒருவர் கீழே கிடக்கும் ஒரு கயிற்றின் மீது பல வரிசைகளில் செங்கற்களை அடுக்கி, அந்தக் கயிற்றை ஒன்றாகச் சுருட்டி மேலே இழுத்து, அந்த மொத்த சுமையையும் தன் முதுகில் ஒரு துணியின் உதவியுடன் தாங்குவதைக் காணலாம்.

மீண்டும் மீண்டும் படிக்கட்டுகளில் ஏறி செங்கற்களைக் கொண்டு செல்வதைத் தவிர்ப்பதற்காக அவர் இந்த யோசனையைப் பயன்படுத்தியுள்ளார்.

ஆனாலும், ஒரே முறையில் இவ்வளவு அதிக எடையைத் தூக்க அவரது உடலில் இருக்கும் அசாத்தியமான பலத்தையும், மன உறுதியையும் நெட்டிசன்கள் வியந்து பாராட்டுகின்றனர். பலரும் அவரை ‘அசல் பாகுபலி’ என்று பாராட்டி வருகின்றனர்.