ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள குருவராஜபேட்டை பகுதியில் இருக்கும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழனி என்பவரது பெட்டி கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் 9 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பெட்டி கடை உரிமையாளரான பழனியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.