கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் பிலோமினாள் இருதயராஜ் தலைமையில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.