தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 8 பட்டியலினத்தவர்கள் அமைச்சர்களாக அங்கம் வகிக்கின்றனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், தற்போதைய அரசுக்கு எதிராகச் சாதிய வெறுப்பு அரசியலை முன்னெடுக்கச் சிலர் திட்டமிட்டுச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அமைச்சரவையில் பட்டியலினத்தவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதை மறுப்பவர்கள், கடந்த காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் இதே சமூகத்தினருக்கு ஏன் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பத் தவறிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

விஜய் தலைமையிலான அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) எதிரானது போன்ற பிம்பத்தை உருவாக்குவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் நடைபெறுவதாகத் தெரிவித்துள்ள திருமாவளவன், இத்தகைய சாதிய வெறுப்புப் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.