காட்டின் அசுர வேட்டைக்காரனான சிங்கமும், தண்ணீரின் ராஜாவான முதலையும் நேருக்கு நேர் மோதினால் எப்படி இருக்கும்? கற்பனைக்கே எட்டாத ஒரு மெய்சிலிர்க்க வைக்கும் நிஜ போராட்டம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. பொதுவாக சிங்கங்கள் பலம் வாய்ந்தவை மட்டுமல்ல, அவை தனியாக வேட்டையாடாமல் ஒட்டுமொத்த கூட்டமாகச் சேர்ந்து திட்டமிட்டு காய் நகர்த்தக் கூடியவை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த வைரல் வீடியோ அமைந்துள்ளது.
ஒரு நீர்நிலையின் அருகே, முதலையொன்று சிங்கத்தின் குட்டியைத் தனது பலம் வாய்ந்த தாடைகளுக்குள் கவ்விப் பிடித்து, ஆழமான தண்ணீருக்குள் இழுத்துச் செல்ல முயன்றது. சிங்கக் குட்டியின் உயிர் பிரியும் தருவாயில், அங்கு வந்த தாய் பெண் சிங்கம் செய்த காரியம் தான் பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. முதலையின் பிடியில் இருக்கும் தனது குட்டியை நேரடியாக மீட்க முடியாது என்பதை உணர்ந்த தாய் சிங்கம், அங்கிருந்த முதலையின் குட்டியைத் தந்திரமாகத் தனது வாயில் கவ்விப் பிடித்தது. அதே நேரத்தில், மற்ற பெண் சிங்கங்களும் முதலையைச் சூழ்ந்து கொண்டு தாக்கத் தொடங்கின.
View this post on Instagram
முதலைக்கு இப்போது மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டது. சிங்கக் குட்டியை விழுங்க நினைத்தால், தன் சொந்த குட்டியின் உயிர் பறிபோய்விடும் என்ற பயத்தில், வேறு வழியின்றி சிங்கக் குட்டியைத் தனது வாயிலிருந்து கீழே துப்பியது. தனது குட்டியைக் காப்பாற்றுவதற்காக, சிங்கத்தின் குட்டியை முதலை உயிரோடு விடுவித்த இந்த அறிவாற்றல் மற்றும் தந்திரமான காட்சி, பார்ப்போரை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றுள்ளது.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தாய் சிங்கத்தின் சமயோசித புத்தியைப் பாராட்டி வரும் வேளையில், சில நெட்டிசன்கள், “காட்டு விலங்குகளுக்கு யாரும் படங்களை காட்டிவிடாதீர்கள், மனிதர்களை விட மாஸாக யோசிக்கிறார்கள்!” என நகைச்சுவையாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
