பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக ‘அம்ரித் ரயில் நிலையங்கள்’ திட்டத்தின்கீழ் சென்னை பூங்கா ரயில் நிலையத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த அரசு விழாவில், ரயில்வே ஊழியர்கள் உற்சாகமாக நடனமாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டு, அதற்கு ஊழியர்கள் துள்ளலாக நடனமாடினர்.
இதனுடன் ரஜினி படப் பாடல்கள் மற்றும் தமிழ், இந்தி மொழிகளில் பிரபலமான சில பாடல்களும் இந்த நிகழ்ச்சியில் ஒலிக்கவிடப்பட்டு விழா கோலமாக மாற்றப்பட்டது.
அரசு விழாக்களில் பொதுவாகக் காணப்படும் இறுக்கமான சூழலுக்கு மாறாக, ரயில்வே ஊழியர்களின் இந்த கலைநிகழ்ச்சி அங்கிருந்தவர்களுக்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது.
