திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழையபட்டி பகுதியில் கன்னியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகா ஜோதி(19) காமாட்சிபுரத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து பி.எஸ்.சி நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை கார்த்திகா விடுதியின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து படுகாயமடைந்த கார்த்திகாவை விடுதி காப்பாளரும், கல்லூரி ஊழியர்களும் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.