நோபல் பரிசு வென்ற பத்திரிக்கையாளரை வரி ஏய்ப்பு வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளர் மரியா ரெஸ்லா, 2021 வருடத்தில் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சி மேற்கொண்டதற்காக நோபல் பரிசு வென்றார். அதன்பிறகு, அவர் மீது பிலிப்பைன்ஸ் அரசு வரி ஏய்ப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதாவது, பிற நாட்டு முதலீட்டாளர்களுடன் சேர்ந்து கொண்டு நிதி திரட்டிவிட்டு, அதற்கான வரியை செலுத்தவில்லை என்று புகார் எழுந்தது.
அரசியலால் தன் மீது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிறார்கள் என்று மரியா தெரிவித்தார். இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தகுந்த ஆதாரங்கள் இல்லாத காரணத்தால், அவர் மற்றும் அவரின் செய்தி நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்ட வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். எனவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.