உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே சமயத்தில் ரஷ்யாவும் அதிகப்படியான இழப்பை சந்தித்திருக்கிறது. இந்த போரில் ரஷ்ய படையினர் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.

எனினும் ரஷ்யா, போரிலிருந்து பின்வாங்க தயாராக இல்லை. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் பகுதிகளை மீண்டும் மீட்பதற்காக அமெரிக்கா போன்ற நாடுகளும் உதவி கொண்டிருக்கின்றது. எனவே, உக்ரைன் ரஷ்ய நாட்டிற்கு தகுந்த பதிலடி கொடுக்கிறது. இதனால், ரஷ்யாவும் சமீப நாட்களாக தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டின் முக்கியமான கட்டிடங்களை நோக்கி தாக்குதல்கள் நடக்கின்றது. இதில்,  ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்ய படையினர் இந்த போரில் வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது என்று கூறியிருக்கிறார்.