கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சனாதனத்தில் இருப்பது  தீட்டு கொள்கை…  இந்து மதத்தை தவிர அல்லது சனாதனத்தை தவிர உலகத்தில் எந்த மதத்திலும் இந்த பாகுபாடு கிடையாது. இவர்கள் சொல்லுகின்ற இந்த மதத்தை தவிர,  உலகத்தில் எந்த மதத்திலும் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு கிடையாது. இதை எவனும் பேச மாட்டான்.

நீ ஏன் முஸ்லீம் மத்தை விமர்சிக்க மாட்டேங்குற? கிறிஸ்துவ மதத்தை விமர்சிக்க மாட்டேங்குற? என சொல்லுறான். ஏன் இந்து மத்தை மட்டும் விமர்சிக்கின்றாய் என சொல்கின்றான். இந்து  மதத்தை விமர்சிக்கவில்லை. இந்து  மதத்தில் இருக்கின்ற பாகுபாட்டை விமர்சிக்கின்றோம். அதுதான் பெரியாருடைய விமர்சனம் அதுதான். அது தான் அம்பேத்கருடைய விமர்சனம். அதுதான் கலைஞரின் போராட்டம்.

பாகுபாடு ஏன் ? அதனால் தான் இந்த அரசியலைமைப்பு சட்டம் மதசார்பற்ற அரசு என்று சொல்லுகிறது. எல்லா நாடுகளிலும் அரசு மதம் சார்ந்த அரசாக இருக்கிறது. இந்தியாவில் மட்டும் ஏன் மதம் சார்ந்த அரசு இருக்கக் கூடாது என்றால்,  இந்தியாவில் இஸ்லாம் பெரிய மதமாக இல்லை அல்லது கிறித்துவம்  பெரும்பான்மை மதமாக இல்லை.

பௌத்தம் பெரும்பான்மை மதமாக இல்லை. இந்து மதம்தான் பெரும்பான்மையாக இருக்கிறது. இந்து மதம் என்னவாக இருக்கிறது என்றால்,  சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. சனாதனத்தை எதன் அடிப்படையாக கொண்டிருக்கிறது என்றால், பிறப்பின் அடிப்படையில் உயர்வு,  தாழ்வு. இதை களைவதற்கு யாரும் போராடவில்லை. அந்த மதத்திற்குள் யாரும் சீர்திருத்த முயற்சிக்கவில்லை என தெரிவித்தார்.