மதுரை மாவட்டம் புதுக்கடை அருகே வேங்கோடு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராபர்ட் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.  வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர், வெளிநாட்டில் பணியாற்றி சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார்.

இவரது மனைவி, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த நிலையில், மளிகைக்கடை நடத்தி வந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ராபர்ட், லாரன்சின் மனைவியிடம் ஆபாசமாக பேசி, பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட போது லாரன்ஸ் மற்றும் ராபர்ட்டுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ராபர்ட் லாரன்சின் உதட்டை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கடை போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.