அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, இந்த ஆட்சி என்னைக்கு போகுதோ,  அன்னைக்கு விடிவு காலம்.  உண்மையான விடியல் எப்ப வரும் ? திமுக என்னைக்கு வீட்டுக்கு போகுதோ,  அன்னைக்கு தான் தமிழகத்திற்கு உண்மையான விடியல் வரப்போகிறது. அதை பூரா கொண்டாட போறோம். இன்னைக்கு மக்கள் முடிவெடுத்து விட்டார்கள்.

நீங்க தங்கம் தங்கமா எங்களுக்கு கொடுங்க. இந்த தங்கத்தை கொள்ளை அடிக்க தான் கொண்டு வந்து இருக்கீங்கன்னு எங்களுக்கு நினைவு வருது. வருமா ? வராதா ? இனி  என்ன கொடுத்தாலும் சரி,  எங்க கிட்ட இதைக்காட்டிலும் டபுள் மடங்கு கொள்ளையடிக்க போற… அப்படித்தான் நினைப்பு வரும். அதனால் திமுக என்ற கட்சிக்கு எந்த காலத்திலும் ஓட்டு போடாதீங்க.

எவன் வேணாலும் தேர்தல் நேரத்துல வருவான்… ஆசை வார்த்தை சொல்லுவான்…. எல்லாம் கொடுப்பாங்க…. ஆனால் தேர்தல் முடிந்ததும் போயிருவாங்க…   ரொம்ப கவனம்.. ரொம்ப கவனம்…  எல்லாரும் நம்ம அம்மா, தலைவர்,  அண்ணன் எடப்பாடியார் மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க. நமக்கு வேண்டியது எடப்பாடியார். எப்படி 2014இல் மோடியா ? லேடியா ? என்று சொல்லும் போது இந்தியாவே மோடி என்று சொல்லும் போது…  தமிழ்நாட்டிலேயே லேடி என்று சொல்லி,  37 நாடாளுமன்ற தொகுதிகளிலே வெற்றி பெற செய்தீர்கள்.

அதேபோல் இப்போ நம்ம ஆறுமுகம் கொண்ட ஒரு முகத்தினுடைய பழனிச்சாமி தான் எங்களுடைய தலைவர். அவர்  சொல்றவங்களுக்கு தான் வாக்களிப்போம். நீ கொடுக்குறதை கொடு,  வாங்கிக்கிறோம். ஆனால் நாங்க போடுறது இரட்டை இலை. விரலிலேயே சின்னத்த காமிச்சது  நம்ம தலைவர் தான் கொண்டு வந்தாரு. கையிலேயே சின்னத்தை காமிச்சிட்டு போயிட்டாரு…  இன்னைக்கு அந்த ரெட்டைல தான் இருக்கு.

52வது ஆண்டில் நாம் முடிவெடுக்க வேண்டியது. ஒரு சூளுரை ஏற்க வேண்டியது. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். வருகின்ற நாடாளுமன்றத்தில் அண்ணன் சொல்ற வேட்பாளர்…  நம்ம கூட்டணி எதில் நிற்கிறதோ, அதற்கு இரட்டை இலை சின்னத்திலும்,  கூட்டணி சின்னத்திலும் வாக்களிப்போம். வெற்றி பெற செய்வோம். அதுதான் நம்முடைய இந்த நேரத்தின் சூளுரை என தெரிவித்தார்.