செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராளுமன்றம் எதற்கு ? எதுக்குன்னு சொல்லு ? அதுக்கு எதுக்கு இத்தனை ஆயிரம் கோடி செலவழிச்சு தேர்தல் எதுக்கு ? ஒரு சட்டம்…  ஏதாவது விவாதிச்சி நிறைவேற்றப்பட்டுள்ளதா ?பணம் செல்லாதுன்னு அறிவிக்க போற… அதனால ஊழல் – லஞ்சத்தை ஒழிக்கலாம்னு நான் நினைக்கிறேன்….  பயங்கரவாதத்தை தடுக்கலன்னு நான் நினைக்கிறேன்.

அப்படி ஏதாவது கருத்தை எடுத்து வச்சாரா ? படக்குனு செல்லாதுன்னுட்டு போயிட்டாரு.  இதுக்கு பெயர் தான் தான்தோற்றி தனம்.  நாம் என்ன நினைக்கிறோமோ அந்த அதிகார திமிரல எதை வேணும்னாலும் செய்றது. அவங்க கை நீட்டி சொல்றத…  கை கட்டி கேட்டு ஆகனும்னு அந்த திமிரல செய்றது. அதை ரொம்ப நாளு சகித்துகிட்டு இருக்க முடியாது ல்ல.

இது ஆளுநர் மாளிகையில்  குண்டு வீசினால் நீட் தேர்வு இரத்து நடந்துறும்மா என்ன ? 10 ஆண்டுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்ற சிறை கைதிகளை  விடுதலை செய்யணும்ன்னு நடவடிக்கை எடுப்பது, தமிழக அரசே  கொண்டு வந்த திட்டம் தான். ஐயா கருனாநிதி அவர்கள் என்ன பண்ணிட்டாங்க அப்படின்னா…  இஸ்லாமிய சிறை கைதிகளுக்கும்,  ராஜீவ் கொலையாளிகளுக்கும் பொருந்தாதன்னு ஒரு ஆணையே சேர்த்து விட்டுட்டாங்க.

அதனால தான் இந்த பிரச்சனை. அப்போ ஒரு மதத்தின் அடிப்படையில் நீங்க பாக்குறீங்க…  25 ஆண்டுகளுக்கு மேல் அவங்க இருக்கிறாங்க….  மதத்தின் அடிப்படையில் கைதிகளை பார்ப்பதை எப்படி ஏற்பது ?  மனிதத்தின் அடிப்படையில் தான பாக்கனும். அதனால இஸ்லாமிய சிறை கைதிகள்… 10 ஆண்டு  தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்யுங்க என  நீண்ட நாள் கோரிக்கை வைத்து.. போராடிட்டு இருக்கின்றோம்…  இதில் இன்னும் கொடுமை என்னன்னா….  சட்டம் விடுதலை செஞ்சிட்டு பிறகு கூட..  இவங்க விடுதலை செய்ய மறுக்கிறங்க….  அரசு விடுதலை செய்ய மறுக்கிறது. இதான் ரொம்ப பெரிய கொடுமை. நீட் தேர்வுக்காக போயி குண்டு வீசுறதெல்லாம்  ஒன்னும் சொல்ல முடியாது. அதனால நீட் தேர்வு நின்றுவிடுமா ? என்ன ?  என தெரிவித்தார்.