டைட்டில் வெளியான நாள் மதலே விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ப்ரோமோ வீடியோவிலேயே ரிலீஸ் தேதி வரைக்கும் படக்குழு அறிவித்துவிட்ட நிலையில் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விஜய், திரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கும் லியோ-விற்கு 1000 கோடி வசூல் இலக்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பட பிடிப்பு தளத்திலிருந்து சில காட்சிகள் லீக் ஆகி இணையத்தில் வைரலாக பரவவே படகுழு அதிரடியான முடிவு எடுத்துள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்-க்கு வரும் நபர்கள் கேமரா அல்லது செல்போன் வைத்திருக்கிறார்களா என தீவிரமாக சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் லீக்கான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தால் எச்சரிக்கை இன்றி நேரடியாக நீக்கப்படும் என படக் குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.