வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள வாத்தி திரைப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது. லியோ திரைப்படத்தை தயாரிக்கும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமே தமிழில் வாத்தி திரைப்படத்தை வெளியிட இருப்பதால் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

ப்ரோமோ வீடியோ சென்சார் செய்யப்பட்டு விட்டதாகவும் வாத்தி படத்தின் இடைவெளியின் போது இந்த வீடியோ தியேட்டர்களில் திரையிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. லியோ திரைப்படத்திற்கு விளம்பரமாக இருக்கும் அதே நேரத்தில் வாத்தி படத்திற்கும் விஜய் ரசிகர்களுக்கு கவர்ந்து இழுக்கும் வகையில் அமைந்திருக்கும். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸின் யுக்தி இரு படங்களுக்கும் சாதகமாக விளங்கும் என சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.