சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு திருமண வீடியோ, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில், மணமகளின் சகோதரிகள் மற்றும் மணமகள் எவ்வளவோ முயற்சித்தும், மணமகன் டான்ஸ் ஃப்ளோரில் ஒரு அங்குலம் கூட அசையவில்லை.

பாலிவுட் நடிகர் கோவிந்தாவின் பிரபலமான “மை ஜோரு கா குலாம் பன்கே ரஹூங்கா” பாடல் ஒலிக்க, மணமகள் உற்சாகமாக ஆடத் தொடங்குகிறாள். ஆனால், மணமகன் கைகளை பேன்ட் பாக்கெட்டில் வைத்து, புன்னகையுடன் அமைதியாக நின்று கொண்டிருக்கிறார். அவரைப் பார்க்கும்போது, ‘புஷ்பா’ படத்தில் வரும் “ஜூக்கேகா நஹி சாலா” என்பது போல, அவர் உறுதியாக நிற்பது தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sahuwan Ji (@ankit_shah_256)

இந்த வேடிக்கையான வீடியோ இன்ஸ்டாகிராமில் @ankit_shah_256 என்ற கணக்கில் பகிரப்பட்டு, 28 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டு, 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். கமென்ட் பகுதியில் பயனர்கள் பலர் தங்கள் கருத்துகளை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளனர்.

ஒருவர், “இவர் புஷ்பாராஜ், ஜூக்க மாட்டார்!” என்று கூற, மற்றொருவர், “புரிஞ்சுக்கோ, இவர் உனக்கு அடங்க மாட்டார்!” என்று கிண்டலடித்தார். இன்னொரு பயனர், “முழு ஆண்கள் சமூகமும் உன்னை பாராட்டுது, ப்ரோ!” என்று மணமகனை புகழ்ந்தார். இந்த வீடியோ, திருமண சீசன் தொடங்க உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை பரப்பி வருகிறது.