ஒரு பெண்ணின் அலட்சியத்தால், அவரது குழந்தை லிஃப்ட் இயந்திரத்தில் தனியாக சிக்கிக்கொண்ட திகிலூட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவம் எங்கு நிகழ்ந்தது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், லிஃப்ட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த ஆபத்தான நிகழ்வு முழுவதுமாக பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில், ஒரு பெண் தனது சிறிய குழந்தையுடன் லிஃப்டுக்குள் நுழைகிறார். அதனுடன், லிஃப்டிலிருந்து வெளியேறிச் சாமான்கள் எடுக்கிறார். கேட் மூடுவதை தடுக்க சிறிய பொருள் வைத்திருந்தாலும், அது செயல்படாமல் போனதால், லிஃப்ட் தானாக மூடப்பட்டு இயக்கமாகி குழந்தை அந்த இடத்தில் தனியாக சிக்கிக் கொண்டது.
சிசிடிவி காட்சிகளில் குழந்தை முற்றிலும் தனியாக, எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் திகைத்து நிற்பது தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலான பின்னர், பலர் சமூக ஊடகங்களில் குழந்தையின் நிலையை கண்டித்து அந்த பெண்ணின் அலட்சியத்தை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
एक महिला के छोटी सी गलती से बच्चा लिफ्ट में फस गया फिर देखिए क्या होता है? pic.twitter.com/A2yAvOFoFI
— Dilip kumar (@dilipku8651) October 8, 2025
“>
சிறிய தவறுகளும், குறிப்பாக லிஃப்ட் போன்ற உயர் ஆபத்து உள்ள இடங்களில், பெரிய விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான விழிப்புணர்வாக இந்தக் காணொளி அமைந்துள்ளது. குழந்தை மீட்கப்பட்டது தொடர்பாக எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்றாலும், இந்த சம்பவம் பெற்றோர் அனைவரும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
