தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலர் இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தனர்.

இவர்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகத்தின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிறுவனுக்கு காயம் ஏற்பட்டு கையில் கட்டு போட்டு முகம் முழுக்க காயமாக இருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் தந்தையிடம் ஒருவர் பேட்டி எடுக்கிறார்.

அப்போது அந்த தந்தை தன்னுடைய மகன் விஜய் கூட்டத்திற்கு சென்றது தெரியாது எனவும் தன்னுடைய உறவினர் ஒருவர்தான் அழைத்து சென்றதாகவும் கூறினார். தான் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த பிறகு தன்னுடைய மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் கிடைத்தது என்றும் கூறினார். உடனடியாக பேட்டி எடுத்தவர் விஜய் வருவது தெரிந்திருந்தால் உங்கள் மகனை நீங்கள் அங்கு அனுப்பியிருக்க மாட்டீர்கள் அப்படித்தானே என்று கேட்டார்.

 

View this post on Instagram

 

A post shared by தமிழக வெற்றிக் கழகம் 🇪🇦 (@votefortvk2026)

“>

அதற்கு அந்த தந்தை இல்லை விஜய் வருவது தெரிந்திருந்தால் நானும் அங்கு போயிருப்பேன் என்று கூறினார். மேலும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு பிறகும் தன்னுடைய மகனுக்கு அடிபட்ட பிறகும் ஒரு தந்தை விஜயை பார்க்க அங்கு நான் சென்றிருப்பேன் என்று கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் டிரெண்டாகி வருகிறது.