
விழுப்புரத்தில் நடந்த அதிமுக 52ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், இந்த முதலமைச்சர் எப்ப பார்த்தாலும் நாங்க பிஜேபிக்கு அடிமை…. பிஜேபி அடிமை… என சொல்லுறாரு. யார் பிஜேபிக்கு அடிமை ? 38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்திருந்த போதும்… அந்த அமைச்சரவையில் சேராமல், தமிழ்நாட்டு உரிமைக்கு போராடிய இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற இயக்கம்.
உங்களை மாதிரி அண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்ப காலியாகும் என்று சொல்லிட்டு, 1999-யில் குறைந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் கொடுத்த ஆதரவை… இந்த தமிழகத்திற்கு மத்திய பாரதீய ஜனதா கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை, காவேரி பிரச்சனை தீர்க்கவில்லை, முல்லைப் பெரியாறு பிரச்சனை தீர்க்கவில்லை என்று சொல்லி வாஜ்பாய் அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்ற, அடுத்த நிமிடம் உள்ள புகுந்து மத்திரி பதவி வாங்குன நீங்க எங்கள சொல்றீங்களா ? அது மட்டுமல்ல..
ஓராண்டு காலம் திரு. முரசொலி மாறன் அவர்கள் மருத்துவமனையில் இருந்தார். கோமாவில் இருந்தார். ஓராண்டு காலம் வரைக்கும் அவரை அமைச்சராகவே வைத்திருந்து… அவர் இருக்கிற வரை…. பிஜேபியின் காலை பிடித்து அடிமை வேலை செய்தது இந்த திராவிட முன்னேற்ற கழகம். பண்டாரம், பரதேசி என்று சொன்னவர்களை நாடி சென்று, பதவியைப் பெற்று… பதவியை அனுபவித்தது இந்த திமுக.
இதே காவேரி பிரச்சனைக்கு…. இன்றைக்கு திமுக 39 நாடாளுமன்ற தொகுதிகள் வச்சி இருக்கின்றது. பாண்டிச்சேரி சேர்த்து 40 பேர். 39 பேர் ஜெயிச்சான்… 39 பேர்ல இப்ப கூட அஞ்சு நாள் நடந்தது நாடாளுமன்றம். ஒரு நாள் DMK நாடாளுமன்ற உறுப்பினர் எழுந்து, 5 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் பயிரை செய்துள்ளார்கள். தண்ணீரை தர மறுக்கிறது கர்நாடகா காங்கிரஸ் அரசு. டெல்லியில் ஆள்கிறது பிஜேபி அரசு. மாநிலத்தில் காங்கிரஸ் அரசு. ஒரு உறுப்பினர் கூட எழுந்து கேள்வி கேட்டதில்லை என தெரிவித்தார்.