அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது.
இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும் பலியாகினர். மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து டாடா குழும தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது, இதயத்தை நொறுக்கும் விஷயம். இது விமான விபத்தில் இழப்பை சந்தித்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. நான் என்ன சொன்னாலும் அவர்களின் இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர்களின் துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன். குடும்பங்களை இழந்தவர்களுக்கு நான் வாழ்நாள் முழுவதும் துணை நிற்பேன்.
அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த வகையில் வேண்டுமானாலும் உதவி செய்வேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அகமதாபாத் விமான விபத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். விமான விபத்திற்கு எஞ்சின் கோளாறு காரணமில்லை. அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளே விமானத்தை இயக்கினர் முதற்கட்ட விசாரணை முடிவு வரும் வரை விபத்திற்கான முழு விவரம் குறித்த எந்த முடிவும் வர முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
