அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் (61). இவர் பல பேரும் நிறுவனங்களின் சொந்தக்காரர் ஆவார் உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான இவருடைய சொத்து மதிப்பு ரூ. 18000 கோடி ஆகும். இவரது முதல் மனைவியான மெக்கன்சி ஸ்காட்டை கடந்த 2020 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இதைத்தொடர்ந்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரான லாரன் சான்சாஸை(55) காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
இவரின் திருமணம் இத்தாலியின் வெனிசில் வருகிற 24-ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்து திருமணம் ரூ.100 கோடி செலவில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் உலக பணக்காரர்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வெனிசில் நட்சத்திர ஹோட்டல்கள் படகு டாக்ஸிகள் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமேசான் நிறுவனர் திருமணத்துக்கு வெனிஸ் நகர் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். இந்த திருமணத்தால் தங்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் கூடும் என்று கூறிய ஜெப் பெசோசுக்கு எதிராக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
