2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் சூழ்நிலை மாறி வருகிறது. அதிமுக தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) மீண்டும் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பின்னர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டி.டி.வி. தினகரன் ஆகியோர் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக தங்கள் முடிவுகளை வெளிப்படுத்தினர்.
இந்த அரசியல் திருப்பங்களைத் தொடர்ந்து, பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசிய போது, “டிடிவி தினகரனுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் தந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டேன். அவர் பரிசீலிப்பார் என நம்புகிறேன். அதேபோல் ஓபிஎஸ் அவர்கள் முடிவையும் திரும்ப பரிசீலிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், NDA கூட்டணிக்குள் சில12 பிரச்சனைகள் இருப்பதாக ஒப்புக்கொண்ட அண்ணாமலை, “சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் கட்சி மேலிடம் மீது எனக்கு எந்தவிதமான அதிருப்தியும் இல்லை. இந்த பிரச்சனைகள் விரைவில் தீரும் என்பதில் நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். இது, கூட்டணி politics இல் புதிய விரிசலா அல்லது வலிமை பெற்ற ஒற்றுமையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
