சென்னை அமைந்தகரை தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை பொறுத்தவரை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்றைய கூட்டம் என்பது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தை பொறுத்தமட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களாக இருக்கக்கூடிய பொன் ராதாகிருஷ்ணன்,  எச். ராஜா,  மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் பல்வேறு முக்கிய தலைவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்டோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தான் இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றிருக்க வேண்டும். அவர் வருவதற்கு காலதாமதம் என தற்போது தான் அறிவிக்கப்படுகிறது. அவர் சரியாக 11:30 மணி அளவில் தான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வருவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நிர்வாகிகள் காலை 10 மணிக்கு முன்பாகவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்து விட்டதால் மேடையில் எச் ராஜா உள்ளிட்ட  மூத்த தலைவர்கள் அமர்ந்திருக்கும் போது, அனைத்து நிர்வாகிகளும் வந்திருக்கிறார்கள்.  கிட்டத்தட்ட 65 மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கலந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் ஏன் இன்னும் கூட்டத்தை தொடங்கவில்லை என கேள்வி எழுப்பினார்கள் ?

தலைவர் வருவதற்கு கால அவகாசம் ஆகும் என தெரிவித்த நிலையில் உடனடியாக கூட்டத்தை தொடங்குங்கள். அவர் வரும்போது கூட்டத்தில் கலந்து கொள்ளட்டும் என தெரிவிக்கப்பட்டது.  இதை அடுத்து அந்த கூட்டத்தில் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டு இந்த கூட்டம் என்பது தொடங்கி நடைபெற்று வருகிறது.  இன்று நடைபெற்று வரக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தை பொருத்தமட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலங்கியது தொடர்பாக விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள், பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் தான் இன்று கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மதியம் சரியாக 1:30 மணி வரை இந்த கூட்டம் என்பது நடைபெற இருக்கிறது.